தரமற்ற 🚰தண்ணீர் குழாயினால் நடந்த அவலம்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகம் முழுவதும் கடும் வறட்சியால் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது😟. இந்நிலையில், பள்ளிபாளையத்தில் நேற்று பூமிக்கு அடியே பாதிக்கப்பட்டிருந்த தரமற்ற குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது😱. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த நகராட்சியில் காவிரியிலிருந்து 🚰குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது😯. இந்நிலையில் அங்குள்ள காவல்நிலையம் அருகே பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் நேற்று இரவு வெடிப்பு ஏற்பட்டது😮. இதனால் 🚰குடிநீர் பீறிட்டு பலமணி நேரமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது😓. இது குறித்து நகராட்சி ஊழியர்களுக்கு பொது மக்கள் அறிவித்தபின்னரும், அவர்கள் 4⃣மணி நேரம் தாமதமாக வந்தனர்😱 என்று கூறப்படுகிறது. தரமற்ற குழாய்களால் ஆங்காங்கே இவ்வாறு நடக்கிறது😟. மேலும், பெருக்கெடுத்து ஓடிய குடிநீரை 👩பெண்கள் தங்களது குடங்களில் பிடிக்க முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬