'பவர் ஸ்டார்' ஸ்ரீநிவாசன் கைது⛓

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

💸பண மோசடி செய்ததாக கூறி பவர் ஸ்டார் ⛓கைது செய்யப்பட்டுள்ளார்😳. நடிப்பது மட்டுமல்லாமல் இவர் சென்னையில் உள்ள வங்கிகளில் 💸பணம் வாங்கித்தரும் தொழிலையும் செய்து வந்துள்ளார்😯. 2013ம் ஆண்டே ரூ.10 கோடி வாங்கிகொண்டு ரூ.1000 கோடி கடனாக வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ⛓கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீன் மூலம் வெளிவந்துள்ளார்😯. தற்போது மீண்டும் சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு 👮போலீசாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர்👍. அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர்😱. இதனை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூர் 👮போலீசார் சென்னை வந்து ⛓கைது செய்து அவரை பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬