மணல் வேண்டுமா⁉, ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்💻

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழ்நாடு முழுவதும் மணல் 💻இணைய சேவைக்கான இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை (Mobile App) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்👏. வரும் ஜூலை 1⃣ம் தேதி முதல் இணையத்தில் பதிவு செய்யாமல் பொது மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களும் மணலினை பெற முடியாது😯. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே பெறமுடியும்👍, மேலும் இந்த இணைய சேவையால் மணல் நியாயமான, விலை குறைவான 💸கட்டணத்தில் பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது🔈.
இந்நிலையில், மணல் பெற்றுக்கொள்ளவதற்கு, 💻கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து, பொது மக்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு, மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பயிற்சி அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், மணல் தேவைப்படுவோர் www.tnsand.in இணையதளத்தின் மூலமும், 📱செல்லிடப்பேசி செயலி மூலமும் புக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬