இன்று நள்ளிரவில் 💸ஜி.எஸ்.டி. அறிமுக விழா😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நாடு முழுவதும் நாளை (ஜூலை.1ம் தேதி), ஜி.எஸ்.டி. 💸வரி விதிப்பு அமலுக்கு வருகிறது😳. இதற்கான அறிமுக விழாவினை பிரதமர் நரேந்திர மோடியின் முன்னனியில் இன்று நள்ளிரவு நடத்தப்படும்😯. பார்லியமென்ட் மைய மண்டபத்தில், இன்றிரவு 11 மணியளவில் இவ்விழா நடைபெறும்👍. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்😐. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகவுடா மற்றும் அனைத்து எம்.பி.,க்கள், மாநில நிதியமைச்சர்கள் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துகிறார்😯.
தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் 💸ஜெயகுமார் பங்கேற்பார் என கூறப்படுகிறது👍. இவர்கள் தவிர, அனைத்து மாநில முதல்வர்கள், நடிகர் ⭐அமிதாப் பச்சன், பாடகி லதா மங்கேஷ்கர், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி உள்ளிட்டோருக்கும் மத்திய அரசு சார்பில் அழைத்து விடுக்கப்பட்டுள்ளது🙂. ஆனால், மற்றொரு பக்கம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை புறக்கணிக்க😱 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬