உள்ளாட்சி தேர்தல் நடத்த 🗳தேர்தல் ஆணையம் அறிவிப்பு🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் உள்ளாட்சி 🗳தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக👍 மாநில தேர்தல் ஆணையர் 👮மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்🔈. மாநில 🗳தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நெல்லையில் நேற்று கலெக்டர் மற்றும் உள்ளாட்சி துறை 👮அதிகாரிகளுடன் 🤔ஆலோசனை நடத்தினார்👍. அதன் பின் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, 'உள்ளாட்சி தேர்தலை ஜூலை மாதத்தில் நடத்த தயாராக உள்ளதாக ஐகோர்ட்டில் தெரிவித்தோம். அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம், கலெக்டர், அரசுத் துறை தலைவர்களிடம் அளித்த மனுக்களின் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் தெரிவித்த அறிவுரையின் அடிப்படையில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து ஆவணங்கள், இறுதி வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்காக அனுப்பப்பட்ட பொருட்களும் தயார் நிலையில் உள்ளது'என்று அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬