கதிராமங்கலம் அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் எண்ணெய் கசிவு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு 🔥தீ பிடித்து எரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது😳. கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு🚫 தெரிவித்த வந்த நிலையில், கடந்த ஜூன் 1ந் தேதி 2 ஆயிரம் 👮போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது😯. இதனை அடுத்து, ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் இன்று ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து ⛽எரிபொருள் வெளியேறியதை அடுத்து அப்பகுதி முழுவதும் பரவ தொடங்கிவிட்டது😱.
குழாயில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் அங்கு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ள 🚒தீயணைப்புத்துறையினரும் ஓஎன்ஜிசி நிறுவன 👮அதிகாரிகளும் குவிந்தனர்😯. அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், எரிபொருள் குழாயை அங்கிருந்து முழுமையாக அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்😱 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬