'கள்ளத்தொடர்புக்கு இடையூறாய் இருந்ததால் கொன்றேன்'-👩மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்து கட்டினேன்' என, தொழில் அதிபர் கொலை வழக்கில் ⛓கைது செய்யப்பட்டுள்ள அவரது 👩மனைவி பரபரப்பான வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளார்😳. ஈக்காட்டுத்தாங்கல், ஜோதி நகரை சேர்ந்தவர் உதயபாலன் (வயது 37) தொழில் அதிபர். இம்மாதம் 5ம் தேதி, படுக்கை அறையில், கொல்லப்பட்டு கிடந்தார்😟. அவரிடம் இருந்து ஐந்து சவரன் செயின் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது😱. இதுகுறித்து 👮போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க துவங்கினர்👍. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த, பிரபாகரன்,35, என்ற கால்🚕 டாக்சி ஓட்டுனரை ⛓கைது செய்து விசாரித்ததில், 👮போலீஸின் சந்தேகம் தீராததை அடுத்து, உதயபாலனின் மனைவி 👩உதயலேகாவை, (வயது 37) கைது செய்தனர்⛓.
அப்போது அவர்🎙, 'எனக்கும் என் கணவருக்கும் ஒத்து வராத நிலை ஏற்பட்டது அப்போது எனக்கு ஆதரவாக இருந்த பிரபாகரனுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக என் கணவர் இருந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினோம்.ஜூன் 14 இரவு, காரைக்காலில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, குழந்தைகள் மற்றும் என்னையும் கணவர் பஸ் ஏற்றி விட்டார். நாங்கள் ஊருக்கு போவது பிரபாகரனுக்கு தெரியும். அவன், ஏற்கனவே, எங்கள் வீட்டுக்கு, கள்ளச்சாவி தயாரித்து வைத்து இருந்தான். அன்று இரவு, 2:00 மணிக்கு, அந்த சாவி மூலம் வீட்டை திறந்து, படுக்கை அறையில் இருந்த என் கணவரை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்தி கொன்று விட்டு, எனக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தான்.ஆனால், அவன் என் கணவரை கொன்றுவிட்டு, வாசலில் செருப்பை மறந்து சென்று விட்டான். அதை வைத்து போலீசார் பிரபாகரனை பிடித்து விட்டனர்.இதனால், நானும் மாட்டிக்கொண்டேன்.' என்று கூறினார்😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬