டி.கே.ராஜேந்திரன் சட்ட ஒழுங்கு 👮டி.ஜி.பி.யாக நியமனம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இன்றுடன் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 👮டி.கே.ராஜேந்திரன் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்😳. தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால்😳, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வந்தது🤔. குட்கா, பான்மசாலா விவகாரத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது🚫 என அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர்😯.
இந்நிலையில், பணி மூப்பு அடிப்படையில் முதல் 5⃣இடங்களில் இருக்கும் டி.கே ராஜேந்திரன், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன் உள்ளிட்ட 👮அதிகாரிகளைக் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது👍. அதை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது👍. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு காவல்துறை 👮டிஜிபியாக, டி.கே. ராஜேந்திரனை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது👍. இதனால் டி.கே.ராஜேந்திரன் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக மேலும் 2⃣ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬