தேக்கடியில் மீண்டும் தொடங்கியது 🚤படகு சவாரி😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தேனி மாவட்டம் தேக்கடியில் ஒரு மாதத்திற்குப்பிறகு மீண்டும் 🚤சுற்றுலாப்படகு சவாரி தொடங்கியுள்ளது😍. போதியஅளவு ☔மழை இல்லததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் கீழ் குறைந்தது😟. இதனையடுத்து கடந்த மாதம் முதல் தேக்கடி ஏரியில் சுற்றுலா 🚤படகு சவாரி நிறுத்தப்பட்டது👍. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 112 அடியை தாண்டியது😯. இதனையடுத்து தேக்கடி ஏரியில் கடந்த ஒருமாத காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் 🚤படகுச்சவாரி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது👍. படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது🙂.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬