பொறியியல் 📚படிப்பிற்கான 💸கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சுயநிதி கல்லூரிகளான பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்பு, 💸கட்டணத்தை உயர்த்தி கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது🔈. அதன்படி, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கு கட்டணம் 💸40 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது😳. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பாடப்பிரிவு கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது😱.
தரச்சான்று பெற்ற நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 87 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது🔈. கல்விக்கட்டண உயர்வு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கானது மட்டும் என கல்விக்கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬