புழல் ⛓சிறையில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

புழல் ⛓சிறையில் இருந்து, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறை 👮அதிகாரிகள் குடியிருப்பில் இருந்து தப்பிய ஆயுள் கைதி இன்று காலை பிடிபட்டார்👍. வேலைசெய்வதற்காக புழல் சிறையில் இருந்து 7 கைதிகளை அழைத்துச் சென்றுள்ளனர்😳. அதில், 2008ஆம் ஆண்டில் வளசரவாக்கத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சின்னையன் என்ற ஜெயராஜும் ஒருவர்😯. சிறை 👮அதிகாரிகள் குடியிருப்பின் சுற்றுச்சுவர் 6 அடி உயரம் மட்டுமே என்பதால், எளிதாக சுவரில் ஏறி சின்னையன் தப்பியுள்ளார்😳. அவரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை வளசரவாக்கத்தில் உள்ள தமது 👩மனைவியை பார்ப்பதற்காக சின்னையன் பதுங்கி பதுங்கி வந்தபோது 👮போலீஸார் அவரைக் ⛓கைது செய்தனர். தற்போது அவர் மீண்டும் புழல் ⛓சிறையில் அடைக்கப்பட்டார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬