ரசாயன பவுடர் கலந்து 🍾மது அருந்திய 4⃣பேர் மரணம்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அதிக போதைக்காக 🍾மதுவில் ரசாயன பவுடரை கலந்து குடித்த 4⃣பேர் உயிரிழந்தனர்😟. பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5⃣பேர் மதுவினை ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று குடித்துள்ளனர்😱. மேலும், அதிகளவு போதைக்காக 🍾மதுவில் ரசாயன பவுடரை அவர்கள் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது😳. இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய பழனிச்சாமி என்பவர் வயிற்று எரிச்சல் அதிகமாக இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்😳. மேலும் 4⃣பேர் வாந்தி எடுத்ததால் கிருஷ்ணகிரி அரசு 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், விஜய் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர்ழந்தார்😱. இதேபோல் தருமபுரி மருத்துவ கல்லூரி 🏥மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த உத்திரகுமார், பச்சையப்பன் ஆகியோரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்😟. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 👮போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬