'தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்'😟-விஷால்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் திரையரங்கு உரிமையாளர்கள், 💸ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியையும் அரசு விதித்துள்ளது என்று அதனை எதிர்த்து போராட்டம் நடத்தினர்😠. அதன் முடிவில், அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், இப்போதைக்கு ஜிஎஸ்டி வரி தவிர வேறு எந்த வரியும் விதிக்கப்படாது🚫 என்றும் கூறியதை அடுத்து போராட்டம் கைவிட பட்டது👍. ஆனால், திரையரங்குகளில் இன்னும் கேளிக்கை வரியும் சேர்த்துதான் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து 'சகுந்தலாவின் காதலன்' என்ற திரைப்படத்தின் 🎹இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் பேசுகையில்🎙, ஓர் 🙏கோரிக்கையினை அரசுக்கு விடுத்துள்ளார்😯.
அது என்னவென்றால்🎙, 'மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬