💃பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது⛓

  |   செய்திகள் / Kollywood

மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது⛓ செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் 💃பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி📆 படப்பிடிப்பு🎥 முடிந்து இரவில் காரில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் காரை🚗 மறித்து ஏறிய 3 பேர்☠, பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பாவனாவின் புகாரின்பேரில், கார் ஓட்டுநர் மார்ட்டின் முதலில் கைது செய்யப்பட்டார். வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கார் ஓட்டுநராக பாவனாவிடம் வேலை பார்த்த பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில்குமார் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவருடன் மணிகண்டன், விஜீஸ் ஆகியோரையும் போலீஸார்👮 தேடி வந்தனர். இவர்களில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார்.

நடிகர் திலீப், அண்மையில் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் குறித்து, இத்திருமணத்துக்கு முன்னதாகவே, திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம், பாவனா எச்சரித்ததாகவும், அதனால், திலீப் பாவனா இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனது பட வாய்ப்புகளைத் திலீப் தடுத்து✋ நிறுத்துவதாக, பாவனாவே ஒரு பேட்டியில்🎙 பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தற்போதைய கொச்சி சம்பவத்துடன், இந்த விவகாரம் முடிச்சு போடப்பட்டு, கேரளாவில் பரபரப்பானது🤔.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬