கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு 124 பேர் உயிரிழப்பு😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கேரளாவில் அதிவேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 124 பேர் உயிரிழந்து உள்ளனர்😟. கேரள மாநிலத்தை சேர்ந்த திருவனந்தபும், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது😱. இங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் 🏥ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்😟. 🏥மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் தரையில் படுத்து கிடக்கும் அவலம் அங்கு நிலவுகிறது😞. இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் மாநிலம் முழுவதும் 124 பேர் உயிரிழந்துள்ளனர்😟 என்று ஆய்வின் அறிக்கை🔈 தெரிவிக்கிறது🔈. இதனால், மாநில சுகாதார துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, 🏘வீடுகள்தோறும் சென்று சுற்றுப்புற தூய்மையின் அவசியம் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬