🌊பவானி சாகர் அணை திறக்கப்பட்டதற்கு 🚫எதிர்ப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பவானி சாகர் அணையிலிருந்து 🌊தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து ஈரோடு மாவட்ட விவசாயிகள் 🌊ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்😳. இந்த தண்ணீர் 🏭ஆலைகளுக்காகவே திறக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்😱. இது குறித்து அவர்கள் கூறுகையில்🎙, "பவானி சாகர் ஆற்றில் இருந்து கடந்த 30-ம் தேதி வினாடிக்கு 750 கன அடி வீதம் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட குடிநீர் தேவைக்கு என்ற பெயரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், அந்த நீரை காவேரி ஆற்றங்கரையிலிருந்து திருட்டு தனமாக தண்ணீர் விற்பனை செய்யும் கும்பலுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அளிக்க பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறுகிறார்கள்😱. மேலும், எந்த வித அரசாணையும், முன் அறிவிப்பும் இல்லாமல்😳 பொதுப்பணித்துறை 👮அதிகாரிகள் தன்னிச்சையாக தண்ணீர் திறந்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 🌱விவசாயிகள் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬