🏦வங்கி கணக்குகள் இனி கண்காணிக்கப்படும்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அரசு 👮அதிகாரிகள் 💸லஞ்சம் வாங்குவதை கண்டறிய இனி அவரது 🏦வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது🔈. 🏛மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது👍. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசால் நிதி புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது😯. இந்த அமைப்பு, கறுப்பு பணம் மற்றும் நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப்பரிமாற்றம் என்பது குற்றச்செயல்கள் போன்ற சந்தேக பணப்பரிமாற்ற அறிக்கையை நிதி புலனாய்வு அமைப்பு தயாரிக்கிறது😳. இந்த அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, செபி, என்ஐஏ, மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவு மற்றும் அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது👍.
அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களின் 🏦வங்கி கணக்குகளை கண்காணிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது⚖. இதுதொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய கமிஷனர் 👮டி.எம் பாசின் கூறுகையில்🎙,“ அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து பெற்று வருகிறோம். அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கிறோம்” என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬