💸5 ஆயிரத்து 889 கோடி ரூபாய் செலவில் வீடுகள்🏘-முதல்வர்🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழக சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110ன் கீழ் புதிய அறிவிப்புகளை🔈 முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்👍. அதன் படி, அந்த அறிவிப்புகள் வருமாறு..👇

🔰சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை அளிக்க 64 கோடி ரூபாய் செலவில் லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி நிறுவப்படும்.
🔰 9⃣மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 45 கோடி ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்படும்.
🔰22 மாவட்டங்களில் உள்ள அரசு மருந்து கிடங்குகளுக்கு 33 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
🔰சென்னை எர்ணாவூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 6 ஆயிரத்தி 874 வீடுகள் கட்டித்தரப்படும்.
🔰தமிழகம் முழுவதும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு 5 ஆயிரத்து 889 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.
🔰சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 13 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
🔰மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬