ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ். தாமாக பதவி விலக🚫 வேண்டும்😳- தினகரன்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை பதவியில் இருந்து விலக்க🚫 வேண்டும் என்று கட்சியின் கோரிக்கையாக உள்ளது என்று தினகரன் கூறியுள்ளார்😳. இது குறித்து அவர் அளித்த 🎙பேட்டியில், 💺எடப்பாடி பழனிசாமி கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தில் 77 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்றதாக குறிப்பிட்டார்😯. 'பதவி ஆசையிலும், சுயலாபத்திற்காகவும் தான் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக சாடினார். கடந்த டிசம்பர் 29-ல் சசிகலாவை மதுசூதனன், ஒ.பி.எஸ்.உள்ளிட்டோர் தான் கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினர். எனவே பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். மேலும் இரட்டை இலை சின்னம் முடங்க காரணமான ஓ.பன்னீர்செல்வமும் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என்றார்😯. மேலும், முதல்வராக்கிய தங்களுக்கே 😱துரோகம் செய்ததால், 💺எடப்பாடி தனது பதவியினை ✍ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬