கோரக்பூர் 🏥மருத்துவமனையில் மேலும் 42 👶குழந்தைகள் உயிரிழப்பு😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த இரண்டு நாட்களில் உத்திரபிரதேச மாநிலம், கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி 🏥மருத்துவமனையில் மேலும் 42 👶குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்😱. ஏற்கனவே, இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், 2 வாரங்களுக்கு முன்னர் 70க்கும் மேற்பட்ட 👶குழந்தைகள் உயிரிழந்த😱 நிலையில் மீண்டும் நடந்துள்ள இந்த உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை😧 ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம்🎙 அளித்துள்ள 🏥மருத்துவமனை நிர்வாகம், மூளைக்காய்ச்சல், ஒவ்வாமை போன்ற காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்ததாகவும்😳, கனமழை பெய்து மருத்துவமனைக்குள் 🌊வெள்ளம் புகுந்ததால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை😟 என்றும் தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬