தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் ☔கனமழை-🏛மத்திய அரசு எச்சரிக்கை விடுப்பு⚠

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ☔கனமழை கொட்டி தீர்க்கும் என 🏛மத்திய அரசு எச்சரித்துள்ளது😱. இதனால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது😳. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது🎙, "அடுத்த 3 நாட்களுக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா, டாமன் மற்றும் டயூ ஆகிய மாநிலங்களில் ☔கனமழை பெய்யும். இதனால் 14 முக்கிய நதிகளில் நீரின் அளவு வெகுவாக அதிகரிக்கும். சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம்😱. ஆறுகளில் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 🌊ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று ⚠எச்சரிக்கை விடுத்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬