✈அமெரிக்காவில் 6⃣லட்சம் 💵டாலர்களை வசூல் செய்த 🎥'விக்ரம் வேதா'😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ⭐மாதவன் ⭐விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் 🎥'விக்ரம் வேதா'. இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வெற்றிகரமாக 💸வசூல் சாதனை படைத்துள்ளது👏. இது குறித்து அமெரிக்கா 💸விநியோகஸ்தர்களான அட்மஸ் எண்டர்டெய்ன்மென்ட் கூறுகையில், இப்படம் வெளியிடப்பட்டு 3வது வாரம், திங்கட்கிழமை அன்று, 6 லட்சம் அமெரிக்க 💵டாலர்களை வசூலித்துள்ளது. ✈அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக தமிழில் நடித்த ⭐மாதவன், ⭐விஜய் சேதுபதி படம் வசூலித்துள்ளது🎊 என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அவர்கள் கூறுகையில்🎙, இதற்கு முன், ⭐ரஜினி, கமல், விஜய், மணிரத்னம், ஷங்கர் ஆகியோரது 🎥படங்கள் தான் 💵6 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது😳 என்றும் கூறினர். மேலும், விரைவில் ‘கத்தி’, ‘கோச்சடையான்’ பண்ணிய வசூலை 🎥‘விக்ரம் வேதா’ ✈அமெரிக்காவில் முந்தி, அதிகம் வசூலித்த டாப் 10 படங்களில்🎉 ஒன்றாக ‘விக்ரம் வேதா’ இடம்பிடிக்கும்👍 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬