🏛உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா தேர்வு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள தீபக் மிஸ்ரா, தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார்👍. பாட்னா மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், கடந்த 2011ம் ஆண்டு 🏛உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்👍. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை பணிக்காலம் உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை, 🏛மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது🔈. தற்போது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஜெகதீஷ் சிங் கெஹரின், பதவிக்காலம் வருகிற 27ஆம் தேதியோடு முடிவடைகிறது😳என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬