தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன்👨 கைது⛓

  |   செய்திகள்

தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்நிலையில், தி.மு.கவின் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை👨 சென்னையில் வைத்து அமலாக்கத்துறையினர்👮 இன்று கைது⛓ செய்துள்ளனர். 80 கோடி ரூபாய்💰 அந்நிய செலாவணி மோசடியில் அவர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது😯.

ஏற்கெனவே கைதான தொழிலதிபர் லியாகத் அலிகான் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬