தமிழகத்தில் டெங்கு 🤒காய்ச்சல் பரவுகிறது😱-உயிரிழப்புகள் கூடுகிறது😟

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு 🤒காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்😟, வைரஸ் 🤒காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது😱. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் இதுவரை 4 பேர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்😨. இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 100 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், அம்மாவட்டத்தில் உள்ள 12 அரசு 🏥மருத்துவமனைகளில் 557 பேர் 🤒காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்😞.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வினை மேற்கொண்டனர்😯. இதனை அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர்🎙, 'இன்னும் 10 நாட்களில் சேலத்தில் டெங்கு காய்ச்சல் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்படும்' என்றார். பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்🎙,'இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 பேர் பலியாகியுள்ளனர்' என்பதனை தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬