🐄மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை🚫இல்லை-உயர்நீதிமன்றம்⚖

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இறைச்சிக்காக 🐄மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது⚖. இதற்கான இடைக்கால 🚫தடையை மத்திய அரசின் மறு உத்தரவு வரை மதுரை கிளை 🏛உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது⚖. மாடுகளை இறைச்சிக்கு விற்க தடை கோரிய மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்க்கக் கோரி மத்திய அரசின் உதவியுடன் இயங்கும் 🐄பிராணிகள் நல வாரியம் மனு தாக்கல் செய்தது😯. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதே பிரச்னை தொடர்பான வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், 📜மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்👍 என 🐄விலங்குகள் நல வாரியம் வாதாடியது😳.இதற்கு 🚫எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், 🏛உயர்நீதிமன்ற கிளையின் ⚖உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்பதால், தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்🙏. இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை இடைக்கால 🚫தடையை நீட்டித்து நீதிபதிகள் ⚖உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬