🐠மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு 💺முதல்வர் மீண்டும் ஓர் கடிதம்📄

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

புதுக்கோட்டை 🐠மீனவர் பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 📄கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 🐟மீனவர்கள் 49 பேரை சிறை பிடித்ததோடு, அவர்களது 12 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. இதனை கண்டித்து இன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து அவர்களை விடுதலை செய்ய கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்😳.
இதனை அடுத்து முதல்வர் எடப்பாடி, மோடிக்கு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார்✍. அதில், ⛓சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை மீட்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்🙏. மேலும் இலங்கைகடற்படையினரின் இந்த 😡ஆவேச அணுகுமுறை குறித்தும் இலங்கை அரசிடம் பேசி ஓர் முடிவு பெற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬