அதிகளவில் 💸ரூ.200 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட முடிவு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மக்கள் பயன்பாட்டிற்கு, தாராளமாக கிடைக்கும் வகையில், புதிய, 💸200 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சிட, 🏦ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது👍. கடந்த ஆண்டு, நவம்பர் 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததென, 🏛மத்திய அரசு அறிவித்த🔈 பின், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்திற்கு வந்தன.ம.பி., மாநிலம், தேவாசில், 🏛மத்திய ரிசர்வ் வங்கியின், ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தில், இந்த ஆண்டு, 400 கோடி எண்ணிக்கையில், பல மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளை அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது😯.
இந்நிலையில், அடுத்த ஆண்டு, மார்ச், 31க்குள், 40 கோடி, புதிய 💸200 ரூபாய் நோட்டுகள் அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது👍. இதற்கான பணிகளை, ரிசர்வ் வங்கி, தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது. 🏦ரிசர்வ் வங்கியிடம், 💸500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவு இருப்பில் உள்ளதால், அதை அச்சிடும் பணி 🚫நிறுத்தப்பட்டு, 💸200 மற்றும், 20 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬