இன்றைய 'பிக் பாஸ்' அப்டேட்ஸ் இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

93வது தினமான இன்று நடந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் நிகழ்வுகளை காண்போம் வாருங்கள்❗
💥 இன்றைய தினத்தின் முதல் டாஸ்க்காக 'தொட்டா கெட்ட' அளிக்கப்படுகிறது. வீட்டில் உள்ளோர் தங்களது இரு கால்களிலும் பலூனை கட்டிக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் பலூனை உடைப்பது மட்டுமல்லாது அவருடைய பலூனையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
💥 இந்த டாக்கில் கணேஷ் வெற்றி பெறுகிறார். இதனை தொடர்ந்து இந்த வாரத்தின் டாஸ்க்காக 'டான்ஸ் மாரத்தான்' அறிவிக்கப்படுகிறது. அவர்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடைகளும் வழங்கப்படுகிறது.
💥 பிந்து நயன்தாரா, கணேஷ் அஜித், ஆரவ் ரஜினி, சினேகன் ராமராஜன், மற்றும் ஹரிஷ் சிம்பு கதாபாத்திரத்தில் உள்ளனர். அவரவருக்கு போடப்படும் பாடல்களுக்கு சுழலும் மேடையில் ஆட வேண்டும்.
💥 'பார்ட்யூன் ஆயில்' டாஸ்க் நடக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் இரு அணியினராகவும், சினேகன் நடுவராகவும் இடம்பெறுகின்றனர். ஆரவ் ஹரிஷ் இணைந்து மூன்று வித பஜ்ஜிகளையும், கணேஷ் பிந்து இணைந்து ஸ்மய்லி செய்கின்றனர்.
💥 இருவரின் சமையலையும் சாப்பிட்டு பார்த்த சினேகன், ஆரவ் மற்றும் ஹரிஷ் அணி வெற்றி பெற்றதாக கூறுகிறார்.
💥 இன்றைய அடுத்த டாஸ்க், கார்டன் ஏரியாவில் சாவிகள் போடப்பட்டிருக்கும். இரு அணிகளாக பிரிந்து ஒருவர் சேரில் இரும்பு சங்கிலிகளால் கைகளிலும் கால்களிலும் போட்டு பூட்டு போட்டு கொள்ள வேண்டும்.
💥 இரு அணியினரின் மற்ற இருவர் கயிற்றால் தங்களது கைகளை கட்டி கொள்ள வேண்டும். கண்களை கட்டிக்கொண்டு கீழே உள்ள சாவிகளை எடுத்து சேரில் அமர்ந்துள்ள தனது அணியினருக்கு கொடுத்து பூட்ட பட்டுள்ள சங்கிலியை திறக்க செய்ய வேண்டும்.
💥 இரு சுற்றுகளாக நடைபெற்ற இந்த டாஸ்க்கிற்கு கணேஷ் நடுவராக உள்ளார். இதிலும், ஹரிஷ் மற்றும் ஆரவ் அணி வெற்றி பெறுகிறது.
💥 'பிக் பாஸ்' வீட்டினை விட்டு செல்ல போவதை நினைத்து அழுகிறார். பிந்து மற்றும் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬