சென்னையில் 'கொசு இல்லா இல்லம்'😳-தமிழக புதிய திட்டம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னையில் டெங்கு 🤒காய்ச்சல் பரவி வரும் நிலையில்😳, 'கொசு இல்லா இல்லம்' என்ற திட்டத்தினை 🏛தமிழக அரசு அறிவித்துள்ளது🔈. அதன் படி, சென்னையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்👍. இத்திட்டத்தில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து சென்னையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர்😯. அதன் தொடக்கமாக சென்னை கே.கே.நகரில் இன்று சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன👏.
மேலும், இந்த நிகழ்வின் போது 🎙பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் 'காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. மருந்தகங்களும் மக்களுக்கு மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகள் கொடுக்கக் கூடாது' என்று அறிவுறுத்தியுள்ளார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬