🏛தமிழக அரசிற்கு மனித உரிமை ஆணையம் 📜நோட்டீஸ்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஜெயலலிதா குணமடைய வேண்டி மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து 🎙பதில் அளிக்கும்படி 🏛தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பி உள்ளது😯. கடந்த வருடம் செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா உடல்நல குறைவால் 🏥அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்😟. அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பலரும் கடவுளிடம் பல வேண்டுதல்களை செய்தனர்😒. அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி 20 👦மாணவர்களின் கன்னங்களில் அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது😱. இந்த புகார் குறித்து 4 வாரங்களுக்குள் 🏛தமிழக அரசு 🎙பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் 📜நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்😳 சென்னை 👮காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬