தூய்மை பணியில் ஈடுபட்ட 🏏சச்சின்👍-பாராட்டிய பிரதமர்🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து👍 பிரபல 🏏கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்😯. நாடு முழுவதும் தூய்மையை மேம்படுத்த அனைவரையும் வலியுறுத்தி வருகிறார்👍. இவரது இந்த திட்டத்திற்கு பல்வேறு தலைவர்கள், ⭐நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்🔈. பிரபல 🏏கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவும் ஆதரவு தெரிவித்தனர்👍. இதனை தொடர்ந்து, இருவரும் மும்பையின் பந்த்ரா பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 🏏சச்சினின் மகன் அர்ஜூனும் தூய்மை பணியில் ஈடுபட்டார்👍.
தூய்மை பணிக்கு, 💃அனுஷ்கா சர்மா, ⭐அக்சய் குமார் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்🔈. இந்த பணிக்கு முன்னதாக 💻டுவிட்டர் பக்கத்தில் சச்சின் கூறியுள்ளதாவது, "இந்தியா தூய்மையாக வைத்திருப்பதற்கு அனைவரும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும். நண்பர்களை தேர்ந்தெடுங்கள். தெருவை தேர்ந்தெடுங்கள். இணைந்து இந்தியாவை தூய்மைபடுத்துவோம்",எனக்கூறியுள்ளார்😯. இது குறித்து 🏏சச்சினை 💻ட்விட்டரில் பாராட்டிய மோடி கூறியிருப்பதாவது, "தூய்மை பணியில், அர்ஜூன் உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தூய்மை பணியில் சச்சினின் உறுதியானது பாராட்டத்தக்கது. இந்த பணி இந்தியா முழுதும் உள்ள மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தூய்மை பணியில் ஈடுபட்ட ஆதித்யா தாக்கரேவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்🔈.
💻 http://v.duta.us/EJSrLwAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬