✈விமான நிலையங்களில் பயோ மெட்ரிக் சாதனம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இந்திய ✈விமான நிலையங்களில் உள்நாட்டு முனையத்தில் பயணிகளை பயோ மெட்ரிக் பதிவு மூலம் ✈விமானத்துக்குள் அனுமதிக்கும் முறையை அமல்படுத்த 🏛மத்திய அரசு திட்டமிட்டுள்ளது👍. இது குறித்து ✈விமான போக்குவரத்து செயலர் சவுபே கூறுகையில்🎙, "பயணிகள், விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்குள் நுழையும் முன் பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதிபடுத்தி கொள்ளலாம். இதற்காக அடையாள அட்டைகளை காட்ட தேவையில்லை. விமான டிக்கெட் தேவையில்லை. இதற்கு மாறாக விமான நிறுவனத்தின் தகவல்கள் மூலம், பயணி முன்பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், மின்னணு முறையிலேயே, குறிப்பிட்ட பயணிகள் அனைத்து சோதனைகளையும் கடந்து வந்துள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ‛டிஜி யாத்திரா' என்ற இந்த திட்டத்திற்குகாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு மற்றும் அமல்படுத்தும் காலம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பயணம் செய்யும் போது பாஸ்போர்ட்டை கையில் வைத்திருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬