இன்று வெளியான 🎥படங்களின் ஒரு பார்வை😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥கருப்பன்⭐⭐⭐
படத்தின் ட்ரைலர்📹http://v.duta.us/n17EpwAA
வாடி வாசலில் 🐮ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை👍. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய 🐮காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற 😳கர்வத்தில், இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை 💍திருமணம் செய்து வைக்கின்றேன் என்று அவரை கூற செய்கின்றனர்😯. அதை தொடர்ந்து அந்த 🐮காளையை விஜய் சேதுபதி அடக்கி ஒரு சில பிரச்சனைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார்👏. ஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி ⭐பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது 💃தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க😱, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை. ⭐விஜய் சேதுபதி,💃தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்😍.இத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தியுள்ளார். 🎹இமான் இசையில் பாடல்கள் எடுபடவில்லை😟. ஹீரோ வில்லனுக்கு இடையே இன்னும் சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது😯. மொத்தத்தில் விஜய் சேதுபதி தனது இலக்கை அடைந்தார் என்றே கூற வேண்டும்👍.

🎥ஹரஹர மஹாதேவகி⭐⭐
படத்தின் ட்ரைலர்📹http://v.duta.us/cvxi7QAA
🎥ஹரஹர மஹாதேவகி இந்த வார்த்தையை கேட்டதுமே இளைஞர்கள் 😂சிரிக்கத்தொடங்கி விடுவார்கள்👍. இதற்கு காரணம் அந்த 📱வாட்ஸ்அப் சாமியாரின் ஆடியோக்கள் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே❗. 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் தான்😯. படத்தின் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை சிரிப்புக்கு பஞ்சமிருக்காது👍. மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் காமெடி, போலிச்சாமியார்கள் காட்சி, அனகோண்டா காமெடி, நகைச்சுவையோடு கூடிய சமூககருத்தினை கூறுகிறது👏. 👩பெண்கள், குடும்பமாக பார்க்க முடியாத படியான காட்சிகளும், வசனங்களும் படத்தின் ஒரு குறை😟. ஏற்கனவே பார்த்து பழகிய சில காட்சிகள் வெறுப்பை ஏற்படுத்துகிறது😟. மொத்தத்தில் இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு ஜாலியான படம்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬