🛤தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் தாமதமான ரயில்கள்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 4.40 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது😯. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சிக்னலுக்காக மெதுவாக சென்றபோது வளையாம்பட்டு பகுதியில் 🛤தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்த இன்ஜின் டிரைவர் உடனே ரயிலை நிறுத்தினார்👍. அவரது தகவலையடுத்து ஜோலார்பேட்டை 🚉ரயில் நிலைய அதிகாரிகள் அந்த மார்க்கமாக வரும் அனைத்து ரயில்களையும் ஆங்காங்கே நிறுத்தும்படி கூறினர். 👮அதிகாரிகள் குழுவினர் வந்து பார்த்தபோது, 🛤தண்டவாளத்தில் சுமார் 6 அங்குலத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர்😯. இதனால் அந்த வழி வந்த 🚃ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது😳.
இதையடுத்து, பழுதடைந்த 🛤தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயிலை அப்புறப்படுத்தினர்😯. அதன்பிறகு 13 மீட்டர் தூரத்திற்கு புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடைந்தது. ரயில்கள் ஆங்காங்கே நின்றதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்😟. இதுகுறித்து, டிவிஷனல் இன்ஜினியர் அபிஷேக் வர்மா கூறுகையில்🎙, `இந்த தண்டவாளம் அமைத்து 10 ஆண்டுகளானதால் வலிமை இழந்து இவ்வாறு விரிசல் ஏற்பட்டிருக்கலாம்😱 என்று தெரிகிறது. எனினும் விசாரணை நடத்தப்படுகிறது’’ என்றார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬