நெல்லை 📰பத்திரிகையாளர்கள் மீது 👮போலீஸ் தாக்குதல்😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நெல்லையில் மாவட்டக் 👮காவல்துறைக் கண்காணிப்பாளர் 🏢அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்களை போலீஸார் தாக்கியதில் மூன்றுபேர் காயமடைந்தனர்😟. தவறான செய்தி வெளியிட்டதாக 📰செய்தியாளர்கள் சார்பாக இன்று மாவட்டக் 👮காவல்துறைக் கண்காணிப்பாளர் 🏢அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 👮காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சந்திக்க 🚫மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால் 📰பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்😳.
இதனால் 👮காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை 🚔வாகனத்தில் ஏற்றியதில் மூன்று பத்திரிகையாளர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது😟. மேலும் பத்திரிகையாளர்களின் 📱செல்போன் உடைக்கப்பட்டது😱. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬