🚬புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகளில் 🍫சாக்லேட் விற்க தடை🚫

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

'புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், குழந்தைகள் சாப்பிடும், சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது' என, 🏛மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது😯. இதுகுறித்து, அனைத்து 🏛மாநில அரசுகளுக்கும், 🏛மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய 📄கடிதத்தில் கூறியிருப்பதாவது, "சாதாரண பெட்டிக் கடைகளில், சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களுடன், பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்கான பொருட்களை வாங்க செல்லும் குழந்தைகள், அங்கு விற்கப்படும் புகையிலை பொருட்களால் கவரப்படுகின்றனர். இதனால், சிறு வயதிலேயே புகையிலை பயன்படுத்த துவங்குவதன் காரணமாக, பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், குழந்தைகளுக்கான பொருட்களை விற்க அனுமதிக்கக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது😯. மேலும்✍ "புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவற்றை, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬