மாணவி 👩அனிதாவிற்கு சென்னையில் நினைவேந்தல்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் மாணவர்கழகம் சார்பில் நீட் ✍தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி 👩அனிதாவிற்கு நினைவேந்தல் நடைபெற்றது😯. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் முன்னாள் எம்பி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் மற்றும் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் கலந்து கொண்டனர்👍.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் கூறுகையில்🎙, “நீட் தேர்விற்கான போராட்டங்கள் சட்டரீதியாக தொடர்ந்து நடைபெறும். நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் அனிதா விதையாகியுள்ளார். அதிலிருந்து வரும் தலைமுறையினர் கனிகள் ஆக வேண்டும்.” என்று கூறினார்😯. தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி🎙,”நீட்டிற்கு எதிரான போராட்டங்களை சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும்,” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬