24 மணிநேர 🤒காய்ச்சல் தனி பிரிவு👍-விஜயபாஸ்கர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகம் முழுவதும் 🏛அரசு 🏥மருத்துவமனைகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது👍 என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்🔈. தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் 🤒காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது😯. இதனால் ஏற்படும் 😟உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது😱. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் 📰செய்தியாளர்களிடம் பேசினார்🎙. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு 🏥மருத்துவமனைகளில் 🤒காய்ச்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்😯. இந்த சிறப்புப் பிரிவு 24 மணிநேரமும் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்🎙. மேலும் 🏥அரசு மருத்துவமனைகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது👍 என்றும், விடுமுறை நாட்களிலும் சுகாதாரத்துறை 👮அதிகாரிகள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬