சேகர் ரெட்டியின் 📓டைரி-வெளியான பரபரப்பு தகவல்கள்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வருமான 💸வரித்துறை சோதனையின் போது, தொழிலதிபர் சேகர் ரெட்டி 🏡வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான 📄ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் 📓'டைரி'. அந்த 📓டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது😯. இந்நிலையில், தனியார் ஆங்கில 📺தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை 📓டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக இன்று செய்தி ஒளிபரப்பியது😳. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை 💺முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
இதில் உள்ளவர்களை பதவி நீக்கம்🚫 செய்ய வேண்டுமென்று தற்போது பல வகையில் போராட்டங்களும்😡, வலியுறுத்தல்களும் நடைபெற்று வருகிறது😯. மறு பக்கம் இது குறித்து சேகர் ரெட்டி விளக்கம்🎙, " நான் யாருக்கும் பணம் ஏதும் தரவில்லை; பிறருக்கு பணத்தை தர வேண்டிய அவசியமும் இல்லை. வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய தொழில்களில் இருந்து வந்தவையே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்பதி உட்பட 2 இடங்களில் மட்டுமே பார்த்துள்ளேன்" என்றும்😳, "எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை டைரியில் உள்ளது யார் எழுதியது என்பது தெரியவில்லை, அது எனது கையெழுத்து இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் என்னுடைய வீட்டில் இருந்து எந்த ஒரு டைரியையும் கைப்பற்றவில்லை. நாடு முழுவதும் நாங்கள் நேர்மையான முறையில் தொழில் செய்து வருகிறோம், அனைத்துக்கும் முறையான கணக்கு உள்ளது. மேலும் வருமான வரி முறையாக செலுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get Tamil News on Whatsapp 💬