இந்தியா-இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி🏏-இந்தியா படுதோல்வி😟

✍இளவேனில்🌄

இலங்கைக்கு 🚫எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது😟. இமாச்சலப்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துவங்கியது🙂. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா 'பவுலிங்' தேர்வு செய்தார்👍. போட்டியின் துவக்கத்திலேயே மாத்யூஸ் பந்தில் தவான் டக்-அவுட்டானார்😳. லக்மல் 'வேகத்தில்' ரோகித் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்😟. இருப்பினும், சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி அரைசதம்👍 கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்😯. இந்திய அணி 38.2 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது😟. இலங்கை சார்பில் அதிகபட்சமாக லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார்😳. இரண்டாம் கட்டத்தில் 🏏பேட்டிங்கில் இறங்கிய இலங்கை அணி, 20.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬