கன்னியாகுமரி 🐠மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து🔈 தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஓகி புயலில் சிக்கி, காணாமல்போன 🐠மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்👍 என்பது உள்ளிட்ட பல்வேறு 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலின்போது உயிரிழந்த மீனவர்களில் இன்னும் 513பேர் கரைதிரும்பவில்லை என மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன😱. அதேபோல் நீரோடி முதல் இரயுமன்துறை வரையுள்ள ஊர்களைச் சேர்ந்த 115 🐠மீனவர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்😟. இந்நிலையில் காணாமல் போன 🐠மீனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கவும்👍, உயிரிழந்த 🐠மீனவர் குடும்பத்துக்கு 💸25லட்ச ரூபாய் நிதி வழங்கவும் 🙏கோரிக்கை விடுத்து, நீரோடியில் இருந்தும் வள்ளவிளையில் இருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அமைதிப் பேரணியாக வந்து மார்த்தாண்டம் துறையில் ஒன்றுகூடிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳.
அதே போல், கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கக்கோரி🙏 கடலூர் சிங்காரவேலன் சிலை அருகே அனைத்து மீனவ பஞ்சாயத்து சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்😯. இதனிடையே அவர்கள், புயல் பாதிப்பால் உயிரிழந்த 🐠மீனவர்களுக்கு 😢கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬