சங்கர் கொலை வழக்கு😳-8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ 🔪படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 👩கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது⚖. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்😳. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர்😯. இவர், பழநியை சேர்ந்த 👩கவுசல்யா என்பவரை காதலித்து ஜாதி மறுப்பு 💍கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2016 மார்ச் 13ல் உடுமலையில், 👩கவுசல்யாவின் உறவினர்கள் சங்கரை சராமரியாக வெட்டி கொன்றனர்😱. 👩கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார்😳. இது குறித்து 👮போலீசார், கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 👩கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மணிகண்டன், மைக்கேல், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, மணிகண்டன் ஆகியோர் ⛓கைது செய்ய பட்டனர்👍.
இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு இன்று தீர்ப்பிற்காக 🏛நீதிமன்றத்திற்கு வந்தது👍. அப்போது, 👩கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட8 பேரும் குற்றவாளிகள் எனவும், தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்⚖. அவர்களுக்கான தண்டனை குறித்த வாதம் நடந்து வருகிறது.தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 🏛அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்🔈. ஆனால், தண்டனையை குறைத்து வழங்க முடியாது🚫 என நீதிபதி அறிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬