67வது 🎂பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ⭐ரஜினிகாந்த்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 3 தலைமுறையாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போற்றும் 🎥சினிமா நட்சத்திரம் என்றால் அது நமது ⭐சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்👍. இன்று நமது தலைவர் தனது 67வது 🎂பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்😍. இவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ⭐பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது 💐வாழ்த்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்👍. அதே போல், அவரது ரசிகர்களை அவரது பிறந்த நாளை மிக விமர்சையாக👌, மக்களுக்கு உதவும் பல நல திட்டங்களை மேற்கொண்டு கொண்டாடி வருகின்றனர்🙂. ரத்த தான முகாம், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் என இந்தியா மட்டுமில்லாமல் ✈வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அவரது 🎂பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்🎊. இந்நிலையில் நமது தலைவரின் 🎂பிறந்த நாளை முன்னிட்டு, தற்போது அவர் நடித்து வரும் 🎥'காலா' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை, அப்படத்தின் தயாரிப்பாளரான ⭐தனுஷ் தனது 💻ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்👏. இது ⭐ரஜினி ரசிங்கர்களுக்கு மேலும் குதூகலத்தை😍 அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬