டிசம்பர்.31ம் தேதிக்குள் 🏫பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்👍-பள்ளி கல்வித்துறை🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

டிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்கக் 📚கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்👍 என்று 🏫பள்ளிக் கல்வித் துறையின் தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் உத்தரவு அளித்துள்ளார்⚖. ஆதார் புகைப்பட அட்டை எடுக்கப்படாத மாணவர்களின் ஒட்டு மொத்த விவரங்களைப் பெற்று😳, ஆதார் எடுக்கும் முகமையினரிடம் செயல்திட்டத்தை வழங்கி, ஆதார் எடுக்கும் நாள்களில் அம்மையத்தில் கல்வித் துறையைச் சார்ந்த பொறுப்பான நபர் ஒருவரை நியமித்து😯 அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் புகைப்பட அட்டை எடுக்கும் பணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும்👍 என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈. மேலும், ஏற்கெனவே ஆதார் எடுக்கப்பட்ட மாணவர்களினுடைய ஆதார் எண்ணிக்கை மேற்கண்ட தகவல் முறைமையில் 💻பதிவேற்றம் செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬