சென்னை ராயபுரம்-குக்கர் கடையில் வருமான 💸வரித்துறையினர் திடீர் சோதனை😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை ராயபுரத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பட்டர்பிளை 🏠வீட்டு உபயோகப் பொருட்கள் ஷோரூமில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு டோக்கன் மூலம் குக்கர் வழங்குவதாக😱 வந்த புகாரை தொடர்ந்து வருமான 💸வரித்துறையினரும் 🗳தேர்தல் பார்வையாளர்களும் திடீர் சோதனையினை நடத்தியுள்ளனர்😳. புதிதாகத் திறக்கப்பட்ட கடை என்பதால் 💝பரிசுப் பொருட்கள் அல்லது சலுகைகள் என்ற பெயரில் ஆர்.கே.நகர் 👆வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கப்படட்தா⁉என்று 👮அதிகாரிகள் ஆய்வு செய்தனர்😯. அத்துடன் ஷோரூமின் 📹சி.சி.டி.வி காட்சிகளையும் அவர்கள் பார்த்தனர்👍. பின்னர் அங்கிருந்து தேர்தல் 👮அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர்😯. ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் ராயபுரம் பட்டர்பிளை ஷோரூமில் குக்கர் விநியோகம் என்ற புகாரில் 👮அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்🙄. இதனிடையே வருமானவரித்துறை மற்றும் தேர்தல் 👮அதிகாரிகள் சோதனையில் தங்கள் ஷோரூமில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை🚫 என்பது உறுதியானதாக பட்டர்பிளை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬