🐠மீனவர்களுக்கு ⚖நீதி கிடைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்👍-ராகுல் காந்தி🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் சின்னத்துறையில் ராகுல்காந்தி ஆய்வு நடத்தினார். தூத்தூர் 🐟மீனவ மண்டலத்திற்குட்பட்ட 8 கிராம மக்களை ராகுல் சந்தித்துள்ளார்👍. ராகுலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணியும் உடன் இருந்தனர்😯. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து குறைகளை ராகுல்காந்தியிடம் திருநாவுக்கரசர் விளக்கினார்😯. உரிய நேரத்தில் 🐠மீனவர்களை காப்பாற்ற 🏛அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை😱 என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன் பின்னர், ஒக்கி புயலால் ரப்பர் மற்றும் வாழை 🌳மரங்களை இழந்த 🌾விவசாயிகளையும் அவர் சந்தித்தார். 🌱விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேத விவரங்களையும் கேட்டறிந்தார்😳. இதனையடுத்து அவர் பேசுகையில்🎙, மீனவர்களுக்கு நீதி⚖ கிடைக்க நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும்👍 என்றும், 🐠மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்துவதோடு👍. புயலால் பாதிக்கப்பட்டுள்ள 🌾விசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்போம்😯 எனவும் அவர் உறுதியளித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬