சென்னையில் 🚌போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்😳-40% பேருந்துகளே இயங்குகிறது😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் உள்ள மாநகர் விரைவு 🚌பேருந்து விழுப்புரம், கும்பகோணம், தஞ்சை, சேலம், கோவை உள்ளிட்ட எட்டு மண்டல 🏢அலுவலகம் முன்பு 🚌போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்😯. சென்னையில் பல்லவன் இல்லத்தின் முன்பு நேற்று துவங்கிய இப்போராட்டத்தில் ஓய்வூதிய பலன், 💸ஊதிய உயர்வு, காலவதியான 🚌பேருந்துகளை மாற்றிடக் 🙏கோரியும் பத்து தொழில் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்😱. இன்று மாலைக்குள் நடவடிக்கை ஏதும் 🏛அரசு எடுக்கவில்லை எனில்🙁, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்👍 என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்⚠.
சென்னையில் வழக்கமாக 3 ஆயிரத்து 250 🚌பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஊழியர்கள் போராட்டம் காரணமாக போதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இல்லாததால்😟 ஓய்வுபெற்ற ஊழியர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது😯. இதனால் சென்னையில் 40 சதவீத 🚌பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது😳. பேருந்துகள் குறைவான அளவில் இயங்குவதால் அனைத்து பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬