திருநள்ளாறு-பக்தர்களுக்காக மொபைல் 🚽கழிப்பறைகள்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருநள்ளாறில் உள்ள பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோயிலில் (சனி பகவான் ஆலயம்) வரும் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது😯. கலெக்டர் கேசவன் தலைமையில், கோயில் நிர்வாக 👮அதிகாரி விக்ரந்த்ராஜா பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்👍. ♿மாற்றுத்திறனாளிகள், முதியோர் நடந்து செல்ல ஏதுவாக சாய்வுதளம், கூடுதல் மின் விசிறி, ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன😯. ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்களின் 🚗வாகனங்களை நிறுத்த தேவையான இட வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது😯. மேலும், கோவிலை சுற்றி அநேக இடங்களில் பல நிரந்தர கழிப்பறைகள் இருப்பினும்👍, கூடுதல் வசதியாக, கழிவறை இல்லாத இடங்களில் 100 மொபைல் 🚽கழிவறைகள் அமைக்கும் பணி நேற்று துவங்கியது👏. சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மொபைல் 🚽கழிவறைகளை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது👍 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬