ரசிகர்களை சந்திக்கிறார் ⭐ரஜினி😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நடிகா் ⭐ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டாா்🙂. அந்த சந்திப்பில் 15 மாவட்ட ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்👍. இதனை தொடர்ந்து தற்போது ⭐ரஜினி தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக ஏற்கனவே சொன்னவாறு சந்திக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது😯. வருகிற 26ம் தேதி தொடங்கும் சந்திப்பானது 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த சந்திப்பானது கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா 💍திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும்😳, நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த நிகழ்விற்கு 👮காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் 👮காவல் நிலையத்தில் 📜மனு அளிக்கப்பட்டுள்ளது😯. மேலும், இந்த சந்திப்பின் போது ⭐ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பினை அறிவிப்பார்🔈 என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்🙁 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/gbuHrwAA